நினைவில் நீங்கா இலக்கியவாதி சுலைமா சமி இக்பால் நினைவேந்தல்
2024.07.05 இல் குவியம் கலை மையம் ஏற்பாடு செய்த சுலைமா சமி இக்பால் நினைவேந்தல் நிகழ்வில் நான் முன்வைத்த நினைவேந்தலுரை... நினைவில் நீங்கா இலக்கியவாதி சுலைமா சமி இக்பால் நினைவேந்தல் சுலைமா சமி அவர்கள் பற்றிய நினைவுரை - 2024.07.05 வெலிகம ரிம்ஸா முஹம்மத் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த குவியம் கலை மையத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நிகழ்வின் தலைவர் அவர்களுக்கும் ஏனைய அதன் அங்கத்தவர்களுக்கும் எனது உரையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது அன்பு ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.. கடந்து போகின்ற ஒவ்வொரு மணித்துளியும் நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்று கழிந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் சமகாலத்தில் எம்மோடு வாழ்ந்திருந்த ஆளுமைகளை நிச்சயமாக நினைவுகூர வேண்டியுள்ளது. இலக்கிய உலகத்தைப் பொருத்தவரை முன்னைய காலங்களில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடாக பெரும்...