Posts

நினைவில் நீங்கா இலக்கியவாதி சுலைமா சமி இக்பால் நினைவேந்தல்

Image
2024.07.05 இல் குவியம் கலை மையம் ஏற்பாடு செய்த சுலைமா சமி இக்பால் நினைவேந்தல் நிகழ்வில் நான் முன்வைத்த நினைவேந்தலுரை...   நினைவில் நீங்கா இலக்கியவாதி சுலைமா சமி இக்பால் நினைவேந்தல்  சுலைமா சமி அவர்கள் பற்றிய நினைவுரை - 2024.07.05 வெலிகம ரிம்ஸா முஹம்மத் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த குவியம் கலை மையத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நிகழ்வின் தலைவர் அவர்களுக்கும் ஏனைய அதன் அங்கத்தவர்களுக்கும் எனது உரையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது அன்பு ஸலாம்.  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..  கடந்து போகின்ற ஒவ்வொரு மணித்துளியும் நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்று கழிந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் சமகாலத்தில் எம்மோடு வாழ்ந்திருந்த ஆளுமைகளை நிச்சயமாக நினைவுகூர வேண்டியுள்ளது. இலக்கிய உலகத்தைப் பொருத்தவரை முன்னைய காலங்களில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடாக பெரும்...

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ்

Image
பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள  கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் வாழ்க்கைக்  குறிப்பு கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி  46/3 பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த  கவிஞர்  பி.ரி அஸீஸ்  பிச்சை தம்பி  ஹாஜரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராவார். முள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மாஹாவித்தியாலயம்,  பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை,  கிண்ணியா  மத்திய கல்லூரி,  என்பவற்றின் பழைய மாணவரான இவர் கல்வி, கலை, இலக்கிய ம் , சமூக சேவை,  அரசியல் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர். இலக்கியத்துறை இலக்கிய உலக பிரவேசம் 1972 எழுதிய முதலாவது கவிதை – 'பேசும் தெய்வம்' சிறுவர் பாடல் வெளிவந்த பத்திரிகை தினகரன் அதன் பின் 'கிண்ணியா செல்வன்'  என்னும் புனைப் பெயரில் பல ஆக்கங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது. பத்திரிகை தினகரன், வீரகேசரி, மித்திர ன் , தினமுரசு,  தினக்குரல, சுடர் ஒளி,  விடி வெள்ளி  போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகை ராதா, சுந்தரி, ப...

பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Image
பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இல. 46/3, பெரியாற்றுமுனை, கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1972ம் ஆண்டு இலக்கிய உலகில் கிண்ணியாச் செல்வவன் எனும் புனைப் பெயரில் கால்பதித்த இவர், தனது 40 வருட கால இலக்கிய சேவையின் பின்னர் இவ்விருதுக்கு உரித்தாளியாகியுள்ளார். கவிதை, கிராமியக் கவி, சிறுவர் பாடல், சிறுகதை, குறுங்கதை என இலக்கிய உலகின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து வரும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்படி விருதுக்காக தெரிவு செய்யப்படும் 25 முஸ்லிம் கலைஞர்களில் இவ்வாண்டுக்காக இவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல் - அ. அல்பாஸீஸ் குறிப்பு – பூங்காவனம் சஞ்சிகை இவரை வாழ்த்ததுவதில் பெருமையடைகிறது.

மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு

Image
மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு 02.12.2012. ம் திகதி காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரி. கபிபுள்ளா மௌலவி தலைமை தாங்கினார். கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். கவிஞர் பி.ரி. அஸீஸ் மற்றும் பிரதம அதிதிகளான டொக்டர் ஹில்மி மஹரூப்;, ஆர்.எம். அன்வர் ஆகியோர்கள்; உரையாற்றுவதையும் காணலாம். மேலும் புன்னகை இலக்கிய மன்றத்தினால் அதன் தலைவர் கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி மற்றும் பேனா சஞ்சிகை ஆசிரியர் ஜே. பிரோஸ்கான் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.

கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல் வெளியீடு

Image
அழைப்பிதழ் கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல் வெளியீடு காலம் - 02.12.2012 ஞாயிற்றுக் கிழமை நேரம் - காலை 08.30 மணி இடம் - கிண்ணியா பொது நூலக கேட்போர்கூடம் இந் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கின்றோம் பாத்திமா றுஸ்தா பதிப்பகம், பெரியாற்றுமுனை கிண்ணியா 07. பிரதம விருந்தினர்கள்:-                                 நஜீப் அப்துல் மஜீத் (கிழக்கு மாகாண முதலமைச்சர்) டொக்டர் ஹில்மி மஹரூப் (கிண்ணியா நகர பிதா)                                   ஆர்.எம். அன்வர் (மாகாணசபை உறுப்பினர்) நிகழ்ச்சி நிரல் கிராத் வரவேற்புரை - எம்.ரி. சபருள்ளா கான் (நூலகர்) தலைமை உரை - எம்.ரி. கபிபுள்ளா மௌலவி நூல் ஆய்வு - கவிஞர் எ.எம்.எம். அலி சிறப்புரை          - கவிமணி கௌரிதாசன் பிரதம விருந்தினர்கள் உரை பிரதிகள் வழங்கள் ஏற்பு...

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ்

Image
பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள  கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் வாழ்க்கைக்  குறிப்பு கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி  46/3 பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த  கவிஞர்  பி.ரி அஸீஸ்  பிச்சை தம்பி  ஹாஜரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராவார். முள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மாஹாவித்தியாலயம்,  பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை,  கிண்ணியா  மத்திய கல்லூரி,  என்பவற்றின் பழைய மாணவரான இவர் கல்வி, கலை, இலக்கிய ம் , சமூக சேவை,  அரசியல் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர். இலக்கியத்துறை இலக்கிய உலக பிரவேசம் 1972 எழுதிய முதலாவது கவிதை – 'பேசும் தெய்வம்' சிறுவர் பாடல் வெளிவந்த பத்திரிகை தினகரன் அதன் பின் 'கிண்ணியா செல்வன்'  என்னும் புனைப் பெயரில் பல ஆக்கங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது. பத்திரிகை தினகரன், வீரகேசரி, மித்திர ன் , தினமுரசு,  தினக்குரல, சுடர் ஒளி,  விடி வெள்ளி  போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகை ராதா, சுந்தரி, ப...

2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவில் விருதும் கௌரவமும் பெற்ற கவிஞர் பி.ரி அஸீஸ்

Image
2011ம் ஆண்டில் கவிஞர் பி.ரி அஸீஸ் எழுதிய அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள் என்னும் கவி நூல் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பபட்டுள்ளது. இதற்;கான கௌரவமும் விருதும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகாணந்தா கல்லூரியில் 18.10.2012ம் திகதி இடம்பெற்றது.  இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்ரம முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீர திசாநாயக்க உட்பட மாகாண சபை அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். அண்மையில் திருகோணமலை இடம்பெற்ற இலக்கிய விழாவின்போது கவிஞர் பி.ரி அஸீஸ் திரு. கே.எஸ் சிவகுமாரன் கவிஞர்கள் திருமலை நவம் ஷெல்லிதாசன் ஆகியோருடனும் மேமன் கவியுடனும் எடுத்துக் கொண்ட படங்கள்.