Posts

Showing posts from April, 2020

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ்

Image
பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள  கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் வாழ்க்கைக்  குறிப்பு கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி  46/3 பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த  கவிஞர்  பி.ரி அஸீஸ்  பிச்சை தம்பி  ஹாஜரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராவார். முள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மாஹாவித்தியாலயம்,  பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை,  கிண்ணியா  மத்திய கல்லூரி,  என்பவற்றின் பழைய மாணவரான இவர் கல்வி, கலை, இலக்கிய ம் , சமூக சேவை,  அரசியல் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர். இலக்கியத்துறை இலக்கிய உலக பிரவேசம் 1972 எழுதிய முதலாவது கவிதை – 'பேசும் தெய்வம்' சிறுவர் பாடல் வெளிவந்த பத்திரிகை தினகரன் அதன் பின் 'கிண்ணியா செல்வன்'  என்னும் புனைப் பெயரில் பல ஆக்கங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது. பத்திரிகை தினகரன், வீரகேசரி, மித்திர ன் , தினமுரசு,  தினக்குரல, சுடர் ஒளி,  விடி வெள்ளி  போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகை ராதா, சுந்தரி, ப...

பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Image
பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இல. 46/3, பெரியாற்றுமுனை, கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1972ம் ஆண்டு இலக்கிய உலகில் கிண்ணியாச் செல்வவன் எனும் புனைப் பெயரில் கால்பதித்த இவர், தனது 40 வருட கால இலக்கிய சேவையின் பின்னர் இவ்விருதுக்கு உரித்தாளியாகியுள்ளார். கவிதை, கிராமியக் கவி, சிறுவர் பாடல், சிறுகதை, குறுங்கதை என இலக்கிய உலகின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து வரும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்படி விருதுக்காக தெரிவு செய்யப்படும் 25 முஸ்லிம் கலைஞர்களில் இவ்வாண்டுக்காக இவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல் - அ. அல்பாஸீஸ் குறிப்பு – பூங்காவனம் சஞ்சிகை இவரை வாழ்த்ததுவதில் பெருமையடைகிறது.

மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு

Image
மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு 02.12.2012. ம் திகதி காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரி. கபிபுள்ளா மௌலவி தலைமை தாங்கினார். கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். கவிஞர் பி.ரி. அஸீஸ் மற்றும் பிரதம அதிதிகளான டொக்டர் ஹில்மி மஹரூப்;, ஆர்.எம். அன்வர் ஆகியோர்கள்; உரையாற்றுவதையும் காணலாம். மேலும் புன்னகை இலக்கிய மன்றத்தினால் அதன் தலைவர் கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி மற்றும் பேனா சஞ்சிகை ஆசிரியர் ஜே. பிரோஸ்கான் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.

கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல் வெளியீடு

Image
அழைப்பிதழ் கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி நூல் வெளியீடு காலம் - 02.12.2012 ஞாயிற்றுக் கிழமை நேரம் - காலை 08.30 மணி இடம் - கிண்ணியா பொது நூலக கேட்போர்கூடம் இந் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கின்றோம் பாத்திமா றுஸ்தா பதிப்பகம், பெரியாற்றுமுனை கிண்ணியா 07. பிரதம விருந்தினர்கள்:-                                 நஜீப் அப்துல் மஜீத் (கிழக்கு மாகாண முதலமைச்சர்) டொக்டர் ஹில்மி மஹரூப் (கிண்ணியா நகர பிதா)                                   ஆர்.எம். அன்வர் (மாகாணசபை உறுப்பினர்) நிகழ்ச்சி நிரல் கிராத் வரவேற்புரை - எம்.ரி. சபருள்ளா கான் (நூலகர்) தலைமை உரை - எம்.ரி. கபிபுள்ளா மௌலவி நூல் ஆய்வு - கவிஞர் எ.எம்.எம். அலி சிறப்புரை          - கவிமணி கௌரிதாசன் பிரதம விருந்தினர்கள் உரை பிரதிகள் வழங்கள் ஏற்பு...

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ்

Image
பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள  கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் வாழ்க்கைக்  குறிப்பு கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி  46/3 பெரியாற்றுமுனை கிண்ணியா 07 எனும் முகவரியைச் சேர்ந்த  கவிஞர்  பி.ரி அஸீஸ்  பிச்சை தம்பி  ஹாஜரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராவார். முள்ளிப் பொத்தானை அல் ஹிஜ்ரா மாஹாவித்தியாலயம்,  பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை,  கிண்ணியா  மத்திய கல்லூரி,  என்பவற்றின் பழைய மாணவரான இவர் கல்வி, கலை, இலக்கிய ம் , சமூக சேவை,  அரசியல் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர். இலக்கியத்துறை இலக்கிய உலக பிரவேசம் 1972 எழுதிய முதலாவது கவிதை – 'பேசும் தெய்வம்' சிறுவர் பாடல் வெளிவந்த பத்திரிகை தினகரன் அதன் பின் 'கிண்ணியா செல்வன்'  என்னும் புனைப் பெயரில் பல ஆக்கங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளது. பத்திரிகை தினகரன், வீரகேசரி, மித்திர ன் , தினமுரசு,  தினக்குரல, சுடர் ஒளி,  விடி வெள்ளி  போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகை ராதா, சுந்தரி, ப...

2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவில் விருதும் கௌரவமும் பெற்ற கவிஞர் பி.ரி அஸீஸ்

Image
2011ம் ஆண்டில் கவிஞர் பி.ரி அஸீஸ் எழுதிய அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள் என்னும் கவி நூல் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பபட்டுள்ளது. இதற்;கான கௌரவமும் விருதும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகாணந்தா கல்லூரியில் 18.10.2012ம் திகதி இடம்பெற்றது.  இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்ரம முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீர திசாநாயக்க உட்பட மாகாண சபை அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். அண்மையில் திருகோணமலை இடம்பெற்ற இலக்கிய விழாவின்போது கவிஞர் பி.ரி அஸீஸ் திரு. கே.எஸ் சிவகுமாரன் கவிஞர்கள் திருமலை நவம் ஷெல்லிதாசன் ஆகியோருடனும் மேமன் கவியுடனும் எடுத்துக் கொண்ட படங்கள்.

கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள்

Image
கிண்ணியாவின் மண் வாசனையை வளமாக்கும் கிராமியக் கவிகள் கிழக்கு மண்ணின் பாரம்பரிய சிறப்பம்சங்களில் ஒன்று கிராமியக் கவிகள் எனும் நாட்டார் பாடல்களாகும். இது இம்மண்ணின் பெருமைக்கு புகழ் சேர்த்து நிற்கின்றது. அமைதியான கிராமத்து வாழ்க்கை தெளிந்த நீரோடையாக மக்களது மனங்களில் நிம்மதியை ஏற்படுத்தி நிற்கும். இத்தகைய வாழ்கையானது அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே இன்ப மூட்டும். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் கிராமத்தவர் வாழ்க்கை ஆனந்தமாக் கழிகிறது. இருந்தும் இவர்களது வாழ்விலும் பல்வேறுபட்ட துன்பங்களும், துயரங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. இவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை பாடல்கள் மூலம் இம்மக்கள் வெளிப்படுத்துகின்றனர். உள்ளக் கிடக்கைகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் கிராமிய கவிகள் ஆழமான கருத்தும் சுவை நயமும் கொண்டதாக விருக்கும். இவ்வாறான பாடல்கள் கிண்ணியாவில் 1950க்கு முந்திய காலப்பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. வயல் வேலை, சூடடித்தல், காவலுக்கு நிற்றல் போன்ற தொழிலோடு சம்பந்தப்பட்ட பாடல்களும் காதல் நயங்களும் பிரிவுத் துயரை எட...

இலக்கிய அனுபவ அலசல்

Image
இலக்கிய அனுபவ அலசல் கவிஞர். ஏ. இக்பால் பரீட்சை மண்டபம் ஒன்றில் மேற்பார்வையாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றுவதற்கு வந்தவர்களில் பேராசரியர் கா. சிவத்தம்பியும், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இடைவேளையின்போது இலக்கியம் மட்டுமல்ல பலதையும், பத்தையும் கதைத்துக்கொள்வோம். தமிழில் அகராதி வருமுன் நிகண்டுதான் அவ்விடத்தை நிரப்பியது. பெஸ்கி எனும் வீரமா முனிவரின் சதுரகராதிதான் 1732 இல் தொகுக்கப்பட்ட முதல் அகராதி. இந்த அகராதி என்னிடத்தில் உண்டு எனும் சங்கதியை அகராதி பற்றிய கதையின்போது நான் கூறினேன். நுஃமான் என்னிடம் ஷஇக்பால் அதை எனக்குத் தாருங்கள். போட்டோ பிரதி எடுத்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்க வேண்டும்| எனக்கேட்டார். மறுநாள் நான் அதை எடுத்துச் சென்றேன். அட்டை இல்லை. இடைக்கிடை பூச்சரித்த நிலை. என்றாலும் முழுமையாக இருந்தது. முன்பக்க முகவுரைக்கு மேலே `கார்த்திகேசு' என பேனையால் எழுதியிருந்தது. இதைக்கண்ட சிவத்தம்பியவர்கள் ஷஇது எனது தகப்பனாரின் எழுத்து. இது எங்களுடைய சொத்து| என உரிமை கொண்டாடினார். `உங்களுடைய சொத்தாக இர...